Posts

Showing posts from September, 2023

*திராவிட இயக்கத்தின் மகத்தான சாதனை!*

அறிவாசான்  தந்தை பெரியாரால்  தமிழ்நாடு தலை நிமிர்ந்தது.  அதனைத் தொடர்ந்து  தமிழ்நாடு அறிவியலிலும் முன்னேற்ற பாதையில் வெற்றி நடை போட்டு வருகிறது. பின்தங்கிய  கிராமப்புற சூழலில் பயின்று மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையை  பெற்றுள்ள பகுத்தறிவு விஞ்ஞானிகளான  இஸ்ரோவின் முக்கிய மிஷன்களின் திட்ட இயக்குனர்கள் ! சந்திராயன் 1 - மயில்சாமி அண்ணாதுரை சந்திராயன்  2 - வனிதா முத்தையா சந்திராயன்  3 - வீரமுத்துவேல் மங்கள்யான் - சுப்பையா அருணன்  *இவர்கள் அனைவரும் தமிழர்கள்,  தமிழ்நாடு அரசின்  பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.*  தமிழர்களின் சாதனையை பார்த்து உலக நாடுகள் பாராட்டுகிறது!  அறிவியல் விஞ்ஞான மனப்பான்மை வளரட்டும்!  மூடநம்பிக்கை மனப்பான்மை ஒழியட்டும்!

‘விஸ்வகர்மா திட்டம்‘ என்ற பெயரில் குலக்கல்வியா?

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை ‘விஸ்வகர்மா திட்டம்‘ என்ற பெயரில் குலக்கல்வியா?  செருப்பு தைப்பவர் மகன் செருப்பு தைக்கத்தான் வேண்டுமா? அன்று ஆச்சாரியார் (ராஜாஜி) கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை விரட்டியடித்ததுபோல் இதையும் விரட்டியடிப்போம்! அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து களம் அமைப்போம்! ‘திராவிட மாடல்’ அரசு கடுமையாக எதிர்க்கும் - எதிர்க்கவேண்டும்! ‘விஸ்வகர்மா’ திட்டம் என்ற பெயரில் ஒன்றிய பி.ஜே.பி. அரசு குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கத் திட்டமிட்டுள்ளது. செருப்பு தைப்பவர் மகன் செருப்பு தைக்கவேண்டும் என்பதுதான் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் கொள்கை - திட்டம் என்பது அம்பலமாகிவிட்டது. அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி இந்தத் திட்டத்தை முறியடிப்போம். ‘திராவிட மாடல்’ அரசு - முதலமைச்சர் கடுமையாக எதிர்ப்பார் - எதிர்க்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: வருணாசிரம தர்மமான சனாதன தர்மத்தை - ஜாதியை காப்பாற்றி நிலைக்க வைக்கும் தத்துவத்தைப் பாதுகாப்பதே கடந்த 9 ஆண்டுகளாக நடந்துவரும் ஆ...